ஏ.கே.எஸ்.விஜயன் தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக பதவியேற்றார்

தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் இன்று வைகை இல்லத்தில் பதவியேற்றுக்கொண்டார்.

புதுடெல்லி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த சித்தமல்லியைச் சேர்ந்த ஏ.கே.எஸ்.விஜயன், 1999, 2004, 2009 மக்களவைத் தேர்தலில் நாகை (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவராவார். இவர், தற்போது திமுக மாநில விவசாய அணிச் செயலாளராக உள்ளார்.

இந்த நிலையில் ஏ.கே.எஸ்.விஜயன் தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கடந்த 14-ம் தேதி நியமிக்கப்பட்டார். இவரது பதவிக் காலம் ஓராண்டாகும். இதற்கான அறிவிப்பை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்புப் பிரதிநியாக ஏ.கே.எஸ்.விஜயன், வைகை இல்லத்தில் இன்று பதவியேற்றுக்கொண்டார். டெல்லி வைகை இல்லத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன், திமுக எம்.பி.க்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

இதனிடையே டெல்லியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்க உள்ளார். அப்போது, தமிழகத்துக்கான நலத்திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

செய்தியாளர்
ரஹ்மான் தமிழ் மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.