குன்றத்தூர் ஊராட்சி பகுதியில் பள்ளியின் வளர்ச்சி குறித்து ஆலோசனை கூட்டம்
திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குன்றத்தூர் ஒன்றிய வரதராஜபுரம் ஊராட்சியில் பொது மக்களின் அழைப்பை ஏற்று பி.எஸ்.எஸ்.கே மெட்ரிகுலேஷன் பள்ளியில் தென் மேற்குப்பருவ மழை வெள்ளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஆரம்ப சுகாதார மையம் அமைத்தல், சமுதாய நலக் கூடம், ராயப்பா நகர் பூங்கா, நூலகம், மழைநீர் வடிகால் அமைத்தல் போன்றவைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தெகை கலந்துகொண்டார்