பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றிய செம்பரம்பாக்கம் ஊராட்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்

பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்பரம்பாக்கம் ஊராட்சியில் கொரோனா வால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் வேலையில்லாமல் உள்ளவர்களுக்கு செம்பரம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் திரு/ V. சாந்தி வின்சன்ட் அவர்களின் தலைமையில் சுமார் ரூ,(3,00,000/-) மதிப்பிலான அரிசி காய்கறி பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நசரத்பேட்டை காவல் ஆய்வாளர், ஒன்றிய கவுன்சிலர், துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

மேலும் ஊராட்சியில் அடங்கிய தனியார் நிறுவனங்கள் சுபகரா கம்பெனி என்டர்பிரைஸ்& என்டர்பிரைஸ் கல் கம்பெனி, அல்தாப் ஷூ கம்பெனி, டோவர் இந்தியா கம்பெனி, மற்றும் மெடிமிக்ஸ் சோப் கம்பெனி, நிதிஉதவி வழங்கியும் பொருட்கள் கொடுத்தும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.