E-2 ராயப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் திரு,கண்ணதாசன் தலைமையில் வாகன பரிசோதனை
தமிழக அரசு கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் ஊரடங்கு இருக்கும் நிலையில் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு ஜூன் – 14 ஆம் தேதியிலிருந்து ஜூன் – 21ஆம் தேதி 6 மணி வரை ஊரடங்கு தளர்வுகளுடன் அறிவித்துள்ளது
தமிழக முதலமைச்சர் திரு/ மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழக காவல்துறை டிஜிபி திரு/ திரிபாதி இ.கா.ப, அவர்களின் உத்தரவின் பேரில்
தமிழக காவல்துறை ஆணையாளர்
திரு/ சங்கர் ஜிவால் (Commissioner of Police ) அவர்களின் அறிவுறுத்தலின்படி,
ராயப்பேட்டை காவல் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் திரு/ சார்லஸ் அவர்கள் ஆலோசனையின்படி,
E-2 ராயப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் திரு/ கண்ணதாசன் அவர்கள் தலைமையில் E-2 ராயப்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட சென்னை ராயப்பேட்டை மருத்துவமனை அருகில் தலைமை காவலர்கள் உதவி யுடன் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை ராயப்பேட்டை பகுதியில் வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தில் வருவோர் தலைக்கவசம், முக கவசம் தகுந்த இ-பதிவு பெறாத வாகனங்களை பறிமுதல் செய்து முக கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர்.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ் மலர் மின்னிதழ்