தூய்மை பணியாளர்களின் உணவுகளை வழங்கிய தூத்துக்குடி மக்கள் நீதி மய்யம் கட்சியினர்
தூய்மை பணியாளர்களின் பாதங்களை கழுவி கவுரவித்து, இரும்பு சத்துக்கொண்ட உணவுகளை வழங்கிய தூத்துக்குடி மக்கள் நீதி மய்யம் கட்சியினர்
தூத்துக்குடியில் முன்கள பணியாளர்களான தூய்மை பணியாளர்களை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அவர்களது பாதங்களை கழுவி கவுரவித்து உடலில் ஆக்சிசனை அதிகரிக்கும் இரும்பு சத்துக்கொண்ட உணவுகளை வழங்கினர். மக்கள் நீதி மய்யத்தினரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தூத்துக்குடியில் கொரொனா காலகட்டத்திலும் அயராது தங்களது பணிகளை தினந்தோறும் தொய்வின்றி செய்து வரும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களான முன்கள பணியாளர்களை கவுரப்படுத்தும் வகையிலும் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இரும்பு சத்து கொண்ட உணவு பொருட்களை வழங்கவும் முடிவு செய்த தூத்துக்குடி மக்கள் நீதிமய்யம் கட்சியினர் மாநகராட்சி தூய்மை பணியாளர்களை அழைத்து அவர்களது பாதங்களை கழுவி பின்பு அவர்களுக்கு ஆரத்தி எடுத்தி கவுரவபடுத்தினர்.
தொடர்ந்து, மனித உடலில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும் இரும்பு சத்து கொண்ட உணவு வகைகளான தர்பூசணி பழம், மற்றும் அண்ணாச்சிபழம், துளசி இலை, முருங்கை கீரை, எழுமிச்சை மற்றும் இஞ்சிச்சாறு, முழு நெல்லிக்காய், கிராம்பு, அவித்தமுட்டை உள்ளிட்ட உணவு வகைகளை அவர்களுக்கு மக்கள் நீதிமய்யம் கட்சியினர் வழங்கினர். மக்கள் நீதிமய்யத்தின் இந்த செயலை பலரும் பாரட்டி வருகின்றனர். இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கூறுகையில், தூத்துக்குடியில் ஊரடங்கு போட்ட நாள் முதல் காலை, மாலை, இரவு என மூன்று வேலையும் உணவின்றி தவிப்பவர்களுகு உணவு வழங்கி வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக முன்கள பாணியாளர்களை கவுரவித்து அவர்களுக்கு இரும்பு சத்துள்ள உணவுகளை வழங்கி வருகின்றோம். மேலும் ஊரடங்கு எத்தனை நாட்கள் நீடித்தாலும், முடிவும் வரை தங்களால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்வோம் என்று மக்கள் நீதிமய்யம் கட்சியினர் தெரிவித்தனர்.
தமிழ் மலர் செய்திகளுக்காக செய்தியாளர் அரவிந்த் குமார்