வாழ்வாதாரம் வேன்டி கிராமிய கலைஞர்கள் மனு
நாடு முழுவதும் கொரானா என்ற கொடிய நோய் மிகவும் வேகமாக பரவுவதால் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டது. ஆனால் திங்கட்கிழமை அன்று சற்று தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தபட்டாலும், இன்னும் கோயில் மற்றும் மதவழிப்பாட்டுதலங்கள் திறக்க அனுமதி இல்லை.. இதனால் திருவிழாக்களை மட்டுமே நம்பியுள்ள கிராமிய நாட்டுப்புற கலைஞர்கள் அவர்கள் அத்திவாசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல் மிகவும் கஷ்டமான நிலையில் உள்ளதால், நேற்று கிராமிய கலைஞர்களின் வாழ்வாதாரம் வேண்டி கலைஞர் சக்தி கார்த்தி என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ். அனிஸ் சேகர் அவரை சந்தித்து மனு கொடுத்தனர்… தமிழ் மலர் செய்திகளுக்காக செய்தியாளர் நா.புவனேஷ்குமார்