கோவையில் இரண்டு தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது
கோவையில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த இரண்டு தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.கோவையில் உள்ள 4 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. விசாரணையில், சரவணம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் முத்தூஸ் மருத்துவமனை விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அதனால், இம்மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை பிரிவு உரிமம் ரத்து செய்யப்பட்டது. இதற்கான உத்தரவை, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பிறப்பித்தார்.இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததாக கோவை பொள்ளாச்சி ரோட்டில் உள்ள லட்சுமி மருத்துவமனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையிலும், கொரோனா சிகிச்சை பிரிவு உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.!!
◉✿தமிழ்?மலர்✿◉ செய்தி நிருபர் K.ஶ்ரீசரவணகுமார். திருப்பூர்