ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியம் முதலமைச்சர் நிவாரணநிதி MLA உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது

கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக தமிழக அரசு மூலம் மக்களுக்கு உதவும் வகையில் பல நிறுவனங்கள், பிரபலங்கள், இயக்கங்கள் போன்றவைகள் நிவாரண நிதியை தமிழக முதலமைச்சரிடம் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் மழலையர் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகிகள் அவர்களின் ஒரு நாள் ஊதிய தொகை மொத்தமாக வசூல் செய்த ரூபாய் ஒரு லட்சம் காசோலையை திருமதி, குணசுந்தரி தலைமையில், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு, உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து முதலமைச்சர் நிவாரண நிதியை வழங்கினார்கள்.

மேலும் சங்கத்தின் சார்பாக தற்காலிக பணியாளர்கள் ஆக இருக்கும் அவர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தனர்.

செய்தியாளர்
காஜா மொய்தீன்
தமிழ் மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.