துரைப்பாக்கம் J-9 போக்குவரத்து காவல்துறை வாகன தணிக்கை

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவி வருவதால் வாகனங்கள் சாலையில் செல்வதற்கு சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது

இந்நிலையில் கொரோனா வைரஸ் தளர்வில்லா ஊரடங்கு
(24/05/21) ஆம் தேதியில் இருந்து மேலும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் மருத்துவ அவசரம்,இறுதி காரியம், சம்மந்த பட்டவர்கள் வாகனங்களுக்கு தகுந்த இ- பதிவு மற்றும் களப்பணியாளர்கள் ஊடகத்துறையினர் பத்திரிக்கையாளர்கள் தகுந்த அடையாள அட்டை காண்பித்து செல்லலாம் என்று அனுமதி வழங்கி இருந்தனர்.

இந்நிலையில் தகுந்த இ-பதிவு அனுமதி பெறாமல் வரும் வாகனங்களை J-9 துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு/ வெங்கடேசன் உத்தரவுப்படி துரைப்பாக்கம் J-9 காவல் எல்லைக்கு உட்பட்ட சிக்னல் பகுதியில் (27/05/21) நேற்று இரவு நேரத்தில் உதவி போக்குவரத்து காவல் ஆய்வாளர்
திரு/ ஆனந்தகுமார் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர்,
ஜெயப்பிரகாஷ், (ssi)
போக்குவரத்து தலைமை காவலர்கள் வரதராஜன், சுப்பிரமணி,சாம்ராஜ், மற்றும் ஊர் காவல் படை காவலர்கள் உதவியுடன் தகுந்த அனுமதி பெறாமல் செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் இ-பதிவு பெறப்படாத வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

S. முஹம்மது ரவூப் தமிழ் மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published.