ஆசை மீடியா நெட்வொர்க் சார்பாக தமிழ் மலர் மின்னிதழ் சமூகப்பணிகள்
ஆசை மீடியா நெட்வொர்க் நிறுவனர் மற்றும் தமிழ் மலர் மின்னிதழ் ஆசிரியர் சிரஞ்சீவி அனீஸ் அவர்களின் ஆலோசனைப்படி,
சென்னை மாவட்டம் தமிழ்மலர் மின்னிதழ் சார்பாக கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்காக பட்டினம்பாக்கம் பகுதி பொதுமக்களுக்கு இன்று கபசுர குடிநீர், முக கவசம் மற்றும் உணவு பொட்டலங்கள் ஆகியவை ஆசை மீடியா நெட்வொர்க் தலைமை நிர்வாகி அப்துல் சமது தலைமையில், தமிழ் மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர் முஹம்மது ரவூப் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் நமது செய்தியாளர்கள் காஜா மொய்தீன், அப்துல் ரஹ்மான், ரஸூல் மொய்தீன், அப்துல் ரஜாக் மற்றும் தமீம் அன்சாரி ஆகியோரின் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்த AK TELECOM நவ்ஷாத், அ.ஜாபர் அலி, லெனின் ராஜா, விசிக சரவணன், முஸ்லிம்லீக் ஹயாத் பாஷா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்
அப்துல் ரஜாக்
தமிழ் மலர் மின்னிதழ்