ஆர்.எஸ் அறக்கட்டளை சமூக சேவையில்…
கொரானா பேரிடர் காலத்தில் ஆர் எஸ் அறக்கட்டளை-மதுரை சமூக சேவை வியக்க வைக்கிறது மே, 2021,மதுரையில் கொரானா பெருந் தொற்று காரணமாக இரண்டாவது முழு ஊரடங்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் மக்கள் அடிப்படை தேவைக்காக மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் மதுரையில் இயங்கி வரும் ரவீந்திரநாத் சுகந்தி, அறக்கட்டளையின் பொது மக்களுக்கு உணவு பொட்டலங்கள், மாஸ்க், உடைகள், மளிகை பொருள்கள், குடிநீர் என அத்தியாவசியத் தேவைகளை தங்களால் முடிந்த வரை , சொந்த செலவில் வழங்கி வருகின்றனர்,
இதைப் பற்றி திருமதி சுகந்தி இரவீந்திரநாத் அவர்கள் கூறுகையில், பொது மக்களுக்கும், தமிழக அரசுடன் மாவட்ட ஆசிரியர், காவல்துறையினருக்கும், தங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என்றும், அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை, மக்களுக்கு வழங்கி உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள் இருந்தால் தயவு செய்து அவரது உறவினர்கள், ஆர்எஸ் அறக்கட்டளையினை தொடர்பு கொள்ளவும், தங்களால் முடிந்த உதவிகளையும், பாதுகாப்பினையும் ஏற்படுத்தித் தருவதாகவும் கூறியுள்ளனர். இவரது மகத்தான சமூக சேவை கொரானா காலத்தில் மிகவும் பாராட்டப்பட வேண்டியது நமது கடமையாகும் தொடர்புக்கு Ravendranath suganthi-chairtable trust thirunagar, madurai Tel no-7358222379