முதியோர் உணவு வழங்கினார் உதயநிதி ஸ்டாலின், MLA

கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை மிக வேகமாக பரவி கொண்டிருப்பதால் தமிழக அரசு மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தியது.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர்
திரு/மு.க.ஸ்டாலின் அவர்கள் முழு ஊரடங்கு நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த உதவி உணவு போன்ற செயல்களில் ஈடுபடுமாறு திமுக கழக உறுப்பினர்கள் அனைவருக்கும் உத்தரவிட்டிருந்தார்.

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர்
திரு/உதயநிதி ஸ்டாலின் MLA, அவர்கள் சென்னை ராயப்பேட்டை TTK சாலையில் உள்ள ஆதரவற்ற அன்னை முதியோர் இல்லத்திற்கு நேற்று இரவு வருகை தந்து அங்குள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவுகளை வழங்கினார். உடன் சுகாதார ஆய்வாளர்
திரு/குப்பமுத்து,
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.