தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று சென்னையில் நடைபெற்ற அரசு உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மக்கள் நலத்திட்டங்களின் செயல்பாடு குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.மாவட்ட வாரியாக திட்டப் பயன்கள் நேரடியாக மக்களிடம் சென்று சேர வேண்டும் என அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.வரும் மாதங்களில் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என அரசியல் வட்டாரங்களில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
