விஜய் மல்லையாவின் பிறந்த நாள் விழாவில் லலித் மோடி, நாங்கள் ‘இருவரும் இந்தியாவிலிருந்து தப்பி ஓடியவர்கள்’ என சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு இந்தியாவை கிண்டல் செய்யும் வகையில் வீடியோ வெளியிட்டிருந்தார். இதற்கு இணைய தளவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதாவது இந்திய வெளியுறவுத்துறையின் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில் பொருளாதார குற்றச்சாட்டில் “இந்தியாவில் இருந்து தப்பி ஓடியவர்கள், இந்திய சட்டத்தால் தேடப்படுபவர்கள், இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
