அமெரிக்காவின் ஏ.எஸ்.டி. தொலை தொடர்பு நிறுவனத்திற்கு சொந்தமான புளூபேர்ட்- 6 செயற்கைக்கோளை இஸ்ரோ இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 2வது ஏவுதளத்திலிருந்து பாகுபலி ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது . விண்வெளியில் இருந்து நேரடியாக ஸ்மார்ட் போன்களுக்கே அதிவேக இணைய சேவையை வழங்குவதுதான் இந்த செயற்கைக்கோளின் வேலையாகும். இதனால் செல்போன் டவர்கள் கிடைக்காத மலைப்பகுதி மற்றும் அடர்ந்த காடுகள், 5ஜி வேகத்தில் , வீடியோ அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி சேவைகளை மிக எளிதாக இந்த தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை கொண்டு பெற முடியும்.புளூபேர்ட்- 6 செயற்கைக்கோள் 6,000 கிலோ எடை கொண்டதாகும்.
