மஹபூப்நகர் போக்குவரத்து துணை ஆணையர் கிஷான் நாயக்கை லஞ்ச ஒழிப்புத் மற்றும் சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்து தீவிர விசாரணையை லஞ்சஒழிப்பு துறையினர் ஆரம்பித்துள்ளனர் . மேலும் அவரது சொத்துக்கள், பங்குகள், நகைகள் , நிலங்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிகமாக சொத்து குவித்ததற்கான காரணங்கள் மற்றும் தொடர்புள்ள நபர்கள் யார் என்பதையும் விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சங்காரெட்டி மாவட்டம் 38 ஏக்கர் நிலம் ரூ.70 கோடி, நிஷாம்பாத் 15 ஏக்கர் நிலம், லஹாரி இன்டர்நேஷனல் ஹோட்டலில் 45 சதவீத பங்குகள், 1-1/2 கிலோ தங்க நகைகள், வங்கிக் கணக்கில் ரூ.3 கோடி, மற்றும் ஆடம்பர கார்கள் . ஒரு போக்குவரத்து அரசு அதிகாரி சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை குவித்து வைத்திருப்பது ஹைட்ராபாத்தையே இவ்வளவா ? என்று வாயை பிளக்க வைத்துள்ளது.
