சபரி மலையில் மண்டல பூஜை மகரவிளக்கு திருவிழா வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக ஐயப்பனுக்கு தங்க அங்கிகள் ஊர்வலம் நடைபெற்றது. 41 நாட்கள் தொடர்ந்து நடக்கும் இந்த மண்டல பூஜை, விருச்சிகத்தின் முதல் நாளில் தொடங்கி, தனு மாதத்தின் 12ஆம் நாளில் முடிவடைகிறது. இச்சமயங்களில் பக்தர்கள் கடுமையான விரத முறைகளை பின்பற்றி, தங்கள் வாழ்க்கையில் ஒழுக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த ஆன்மிக யாத்திரைகளில், நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வந்து தரிசனம் செய்கின்றனர்.
