திருமலையில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலை நிர்வகிக்கும் தேவஸ்தான நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கோவில் அமைந்துள்ள பகுதிக்கு செல்லும் வழிகளில் மூலிகை தாவர வகைகளை உருவாக்க , திருமலையில் உள்ள சுங்கச்சாவடிக்கு அருகே உள்ள மலைப்பாதைகளுக்கு இடையே 5.5 ஏக்கர் பரப்பளவில் மருத்துவ குணம் நிறைந்த மூலிகைத் தோட்டத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர்கள் செய்ய இருக்கும் செலவு 5 கோடி. மேலும் 2026ல் இத்திட்டம் நிறைவேறும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்
