தேங்காய் எண்ணெய் மருத்துவம்
தேங்காயெண்ணெய் சருமத்துக்கு ஈரப்பதம் அளிக்க கூடியது. இது சிவத்தல் மற்றும் வீக்கத்தை குறைக்கவும் சில பாக்டீரியாக்கள் வராமல் தடுக்கவும் உதவும். ஆய்வுகள் தேங்காயெண்ணெய் அரிக்கும் தோலழற்சி அறிகுறிகளுக்கு உதவும் என்கிறது. இதுவும் தடிப்புத் தோல் அழற்சி போன்ற நிலை. எக்ஸிமா மற்றும் சொரியாசிஸ் இரண்டுமே ஒரே மாதிரியான தூண்டுதல்களை சருமத்தில் உண்டு செய்கின்றன. அதிலும் சொரியாசிஸ் கடினமாக இருக்கும். இவை இரண்டுக்கும் வறட்சி, செதில் மற்றும் அரிப்பு நீங்க தேங்காயெண்ணெய் உதவும். தேங்காயெண்ணெய் வளமான கொழுப்பு அமிலங்களின் மூலம். இது லாரிக் அமிலம் கொண்டது. சருமத்தை ஆற்றி ஈரப்பதமாக வைக்கவும், தொற்று மற்றும் விரிசல் இல்லாமல் வைக்க்கவும் இவை உதவுகிறது.
- தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
- மஞ்சள் – 1 டீஸ்பூன்
தேங்காயெண்ணெயில் மஞ்சளை கலந்து குழைத்து நன்றாக கலக்கவும்.
பிறகு இரண்டு கைகளுக்கு இடையில் தேய்த்தால் சூடாக மாறும்.
பிறகு இதை சொரியாசிஸ் இருக்கும் இடங்களில் தடவி உலரும் வரை வைத்திருந்து பிறகு மந்தமான நீரில் சுத்தம் செய்யவும்.