தமிழகம் முழுவதும் நாளை மின்தடை
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மின்வாரியத்தின் மூலம் தடையற்ற மற்றும் சீரான மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக தற்போது நடந்து முடிந்த பிளஸ் டூ பொதுத்தேர்வு காரணங்களால் கடந்த சில தினங்களாக எந்த பகுதியிலும் மின்தடை ஏற்படவில்லை. தொடர்ந்து கோடை காலம் நெருங்கியுள்ள சூழலில் மின் தேவை அதிகரிக்கும் என்பதால் தடையற்ற மின் சேவையை வழங்க மின்சார துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த ஆண்டில் மார்ச் மாதம் துவக்கம் முதல் தற்போது வரை துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் நுகர்வோர்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நாளை மார்ச் 29ஆம் தேதி சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.