சுனிதா வில்லியம்ஸ் தற்போதைய நிலை

இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் 286 நாட்களுக்கு பிறகு பூமிக்குத் திரும்பியுள்ளார். தற்போது புவியீர்ப்பு விசையை மீண்டும் சரிசெய்ய 45 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார் சுனிதா வில்லியம்ஸ். நீண்ட நாட்கள் நுண் ஈர்ப்பு விசையில் இருப்பது விண்வெளி வீரரின் ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இதனால் உடல் வித்தியாசமாக செயல்படுகிறது. மேலும் பூமியின் ஈர்ப்பு விசை இல்லாமல், விண்வெளி வீரர்கள் தசைகளில் பலவீனம், கடுமையான எலும்பு அடர்த்தி இழப்பு மற்றும் முகம், கழுத்து மற்றும் தாடையில் வீக்கம் ஆகியவை ஏற்படுவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர்.சுனிதா வில்லியம்ஸ் தற்போது 9 மாதங்களாக விண்வெளியில் இருந்துள்ளதால் அவர் தனியாக நடக்கவும் முழுவதுமாக மீண்டு வரவும் சில வாரங்கள் முதல் பல மாதங்கள் வரை ஆகலாம் என்று நாசா தெரிவித்துள்ளது. 286 நாட்கள் நுண் ஈர்ப்பு விசையில் கழித்த சுனிதா வில்லியம்ஸின் உடல் படிப்படியாக பூமியின் ஈர்ப்பு விசைக்கு ஏற்ப மாறுவதால், மீட்பு காலம் 45-60 நாட்கள் அல்லது அதற்கு மேல் ஆகலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.