அமித்ஷா – இ.பி.எஸ்.சந்திப்பு
டெல்லிக்கு அதிமுக அலுவலகத்தை பார்வையிட சென்றதாக கூறிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். சில மணி நேரங்கள் இந்த சந்திப்பு நீடித்துள்ளது. முதலில் அதிமுக நிர்வாகிகள் உடன் கூட்டாகவும், பின்னர் தனியாகவும் எடப்பாடி – அமித்ஷா சந்திப்பு நிகழ்ந்துள்ளது.