மூன்றாம் உலகப்போர்
உக்ரைனுக்கும்-ரஷ்யாவுக்கு இடையே நடந்து வரும் போர் ஐரோப்பிய யூனியன் வரை விரிவடையும் என்று அமெரிக்கா அச்சம் தெரிவித்திருக்கிறது. உக்ரைனின் சுமி (Sumy) நகரம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது. இதில் 25க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் பற்றி விவரித்திருந்த ஐரோப்பிய யூனியன், 27 நாடுகளில் உள்ள 45 கோடி மக்கள் அடுத்த 72 மணி நேரத்திற்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும் என்றும், மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிட்டது எனவும் எச்சரித்திருக்கிறது. நேட்டோவின் மார்க் ருட்டே கூறுகையில், “ரஷ்யா 2030 ஆம் ஆண்டிற்குள் ஐரோப்பாவில் மற்றொரு பெரிய தாக்குதலை நடத்தும்” என்று எச்சரித்துள்ளார். போலாந்து போன்ற சிறிய நாடுகள் மீது கூட ரஷ்யா தாக்குதல் நடத்தினால் அதற்கான எதிர்வினை கடுமையாக இருக்கும் என்றும் அவர் வார்னிங் கொடுத்திருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘நெருக்கடி மேலாண்மை ஆணையர்’ ஹாட்ஜா லஹ்பிப் கூட இதே அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.