ஈரோடு ரயில் சேவைகளில் மாற்றம்
ஈரோடு ரயில் நிலையத்தில் நடைபெறும் தடம் புதுப்பித்தல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “ஈரோடு ரயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சியில் இருந்து ஈரோடு செல்லும் பயணிகள் ரயில் வண்டி எண். 56809 காலை 2 மணி அளவில் திருச்சியில் இருந்து புறப்பட்டு வருகிற மார்ச் 28ஆம் தேதி அன்று கரூர் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். இதேபோல ஈரோட்டில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு செங்கோட்டை புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண். 16845 வருகின்ற மார்ச் 28ஆம் தேதி கரூர் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 3 5 மணிக்கு இயக்கப்படும் நிலம் செங்கோட்டையிலிருந்து அதிகாலை 5.10 மணிக்கு ஈரோட்டிற்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண். 16846 செங்கோட்டையிலிருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும்”