‘கோலி பாப் சோடா’
கோலி சோடா, ‘கோலி பாப் சோடா’ என்ற பெயரில், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய, வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நாடுகளுக்கு ‘கோலி பாப் சோடா’ ஏற்றுமதி செய்த நிலையில், நல்ல வரவேற்பு கிடைத்து இருப்பதாக, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்து உள்ளது. கடந்த பிப்., 4ம் தேதி, ஏ.பி.இ.டி.ஏ., எனப்படும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாடு ஆணையம், சர்வதேச சந்தையில், கோலி பாப் சோடாவை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது.