270 கிலோ எடையுள்ள கம்பியை தூக்கிய யஷ்டிகா ஆச்சார்யா
ராஜஸ்தானை சேர்ந்த 17 வயது வீராங்கனை யஷ்டிகா ஆச்சார்யா, இளையோருக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பவர் லிஃப்டிங்கில் தங்கப்பதக்கம் பெற்றவர் ஆவார். இவர் கடந்த பிப்ரவரி 18 தேதி அன்று பவர் லிஃப்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது யஷ்டிகா ஆச்சார்யா 270 கிலோ எடையுள்ள கம்பியை தூக்கிய போது, தவறி விழுந்து கழுத்து உடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் விளையாட்டு வீரர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.