ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வலைதள பதிவீடு
பெண்களின் வாழ்க்கை சமநிலையை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் இந்த புதிய திட்டம் உதவிகரமாக இருக்கும். அதாவது, பெண்கள் வீட்டிலிருந்தே ஐடி துறையில் வேலை செய்வதற்கு புதிய ஐடி கொள்கையை செயல் படுத்த உள்ளோம். மேலும் இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் அவர்களின் சொந்த ஊர்களில் இருந்து பணிபுரிய ஒவ்வொரு மாநகரம், நகரம் மற்றும் மண்டலத்தில் கிராமப்புறங்களில் பகிர்ந்து பயன்படுத்தும் வகையில் அலுவலகங்கள் அமைக்க ஐ.டி., நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்படும். ஆந்திராவின் இந்த முன்முயற்சி பெண்களின் பொருளாதார சுதந்திரத்திற்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும். ஆந்திராவின் ஐடி மற்றும் ஜிசிசி கொள்கை 4.0 அந்த திசையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் படியாகும்.