ஹஜ் புனித யாத்திரை குழந்தைகளுக்கு அனுமதியில்லை
இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்று வாழ்நாளில் ஒருமுறையாவது ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்பதாகும். இதனால் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்தியாவில் இருந்தும் ஏராளமான இஸ்லாமியர்கள் மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஹஜ் புனித பயண விசா முறையில் சவுதி அரேபிய அரசு பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்துள்ளது. அதிக கூட்ட நெரிசல் காரணமாக ஏற்படும் பாதுகாப்பு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு சவூதி அரேபிய அரசு 2025 ஹஜ் பயணத்தில் குழந்தைகள் பங்கேற்க தடை விதித்துள்ளது. மேலும் முதல் முறையாக யாத்ரீகர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.