டொனால்ட் டிரம்ப் அதிரடி

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கிய பிற நாட்டினரை, நாடு கடத்தப்போவதாக கூறி இருந்தார். அதன்படி அதிபராக தேர்வு செய்யப்பட்டவுன் டொனால்ட் டிரம்ப் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். அந்த வகையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை, ராணுவ உதவியுடன் நாடு கடத்தும் பணிகளை தொடங்கினார். இதில் இந்தியர்கள் விதிவிலக்கு கிடையாது. இந்தியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கை விலங்கு, கால் சங்கிலியுடன் விமானத்தில் அழைத்துவரப்பட்டனா். இந்த சம்பவத்திற்கு இந்திய தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனா். மேலும் இந்தியர்களை இப்படி நடத்திய விவகாரத்தில் அமெரிக்கா மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனா். இந்த நிலையில் அமெரிக்காவில் வசித்து வரும் பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோரை நாடு கடத்தப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்த டொனால்ட் டிரம்ப், பிரிட்டன் இளவரசர் ஹாரியை நாடு கடத்த நான் விரும்பவில்லை. அவரை விட்டு விடலாம். அவர் தனது மனைவியுடன் நிறைய பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்” என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.