பென்டகனில் நிதி முறைகேடு
அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனுக்கு ஆண்டுதோறும் பட்ஜெட்டில் 1 டிரில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கப்படுவது வழக்கம். கடைசியாக அதிபராக இருந்த ஜோ பைடன் 895 பில்லியன் டாலர் ஒதுக்கியிருந்தார். இதனிடையே, பென்டகனுக்கு நிதி ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், பென்டகனில் நடந்துள்ள நிதி முறைகேட்டை கண்டறிவதற்காக, சிறப்பு அரசு பிரதிநிதியாக எலான் மஸ்க்கை நியமிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.