நடிகை கஸ்துரி போன் ஹேக்கிங்
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த கஸ்தூரி, சில மாதங்களுக்கு முன் வரை அவ்வப்போது பரபரப்பாக பேசி வந்தார். கடந்த ஆண்டு நவ., மாதம் தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பிறகு அவர் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார். அவ்வபோது அவர் சமூக வலைதளங்களில் கருத்துகளையும், புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார். எனது மொபைல் போன் ‘ ஹேக்’ செய்யப்பட்டு விட்டது. இதனை வேறு மொபைல்போனில்இருந்து பதிவிடுகிறேன். எனக்கூறியுள்ளார்.