ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு
இந்தியர்கள் அனைவருக்குமே ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர பல்வேறு திட்டங்களின் கீழ் ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். ரேஷன் கார்டு தொடர்பான விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் மட்டுமே ரேஷன் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை மாற்றங்கள் நிதி ரீதியாக வசதியாக இருந்தும் தவறான வழியில் அரசிடம் ரேஷன் உதவிகளைப் பயன்படுத்திக் கொள்ளும் மக்கள் மீது கவனம் செலுத்துகின்றன. இந்த புதிய விதிகளின் கீழ் தகுதியில்லாத மக்கள் இன்னும் ரேஷன் கார்டைப் பயன்படுத்தினால் உடனடியாக அவர்களுடைய ரேஷன் கார்டை ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது