டொனால்ட் டிரம்ப்  திட்டவட்டம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உலக அளவில் அமெரிக்காவை உச்சத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் கூறி இருந்தார். இதற்கிடையே டாலருக்கு பதிலாக பிரிக்ஸ் மாநாட்டில் புதிய கரன்சியை கொண்டு வர திட்டமிடப்பட்டது. ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ்சில், இந்த முடிவு எட்டப்பட்டது. இதனால் உலக நாடுகள் பல டாலருக்கு மாற்றாக புதிய கரன்சியில் வர்த்தகம் செய்யும் என கூறப்படுகிறது. அப்படி செய்தால் அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்படும், எனினும் மற்ற நாடுகளின் கரன்சி மதிப்பு உயருவதற்கு வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது. முன்னதாக டாலருக்கு பதிலாக வேறு கரன்சியை பயன்படுத்தினால் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் உலக நாடுகளை எச்சரித்து இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published.