தை அமாவாசை
தை அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, தானம் அளிப்பது ஆகிய இரண்டும் மிக முக்கியமானதாகும். பித்ருக்களின் ஆசியை பெறுவதற்கும், பித்ரு தோஷம், பித்ரு சாபம் ஆகியவற்றில் இருந்து விடுபடுவதற்கும், நம்முடைய கர்மாக்கள் குறைவதற்கும் இவைகள் மிக மிக அவசியமானவையாகு. தை அமாவாசையில் முன்னோர் வழிபாட்டுடன், சிவ பெருமானையும் வழிபடுவது நல்லது. தை அமாவாசையில் நீர் நிலைகளுக்கு சென்று, சூரிய உதயத்திற்கு பிறகு தர்ப்பணம் கொடுப்பது அவசியம். தர்ப்பணம், தானம் இரண்டும் முக்கியமானவை என்றாலும் யார் கொடுக்க வேண்டும், யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை பொருத்து தான் நமக்கு கிடைக்கும் நன்மைகளும், தீமைகளும் அமையும்.