தைப்பூச திருவிழா

புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் 2025ம் ஆண்டிற்கான தைப்பூச திருவிழா பிப்ரவரி 05ம் தேதி பெரிய நாயகி அம்மன் கோவிலில் இரவு 07.30 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. தைப்பூச திருவிழாவின் 6 ம் நாளான பிப்ரவரி 10ம் தேதி மாலை திருக்கல்யாணமும், இரவில் வெள்ளி தர ஊர்வலமும் நடைபெறும். திருவிழாவின் 7ம் நாள், தைப்பூச திருநாளான பிப்ரவரி 11ம் தேதி அன்று தங்க தேரோட்டம் நடைபெறும். அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் மலர், பால், பன்னீர், வெல்லம், இளநீர், தீர்த்தம் உள்ளிட்ட பல பொருட்களால் காவடி சுமந்து வந்து முருகப் பெருமானுக்கு காணிக்கையாக செலுத்துவார்கள்.

Leave a Reply

Your email address will not be published.