சீனா வழங்கிய செயற்கை வீடு
இலங்கை மீனவ மக்களுக்கு சீனா தற்காலிகமான வீடுகளை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த முள்ளிவாய்க்கால் போர் நடந்து போல லட்சக்கணக்கான மக்கள் முள்வேலிகளில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுப் பல துயரங்களை அனுபவித்தனர். இந்தப் போர் நடந்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்குச் சீனா, வீடுகளை அமைத்துக் கொடுத்து வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவை கான்கீரிட் வீடுகள் அல்ல. கண்டெய்னர் மூலம் தயாரிக்கப்பட்ட வீடுகள். பருத்திதுறையில் உள்ள மீனவ மக்களின் நலனைக் காக்க வேண்டி இந்த வீடுகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.இந்த கண்டெய்னர் வீடுகள் நிரந்தரமானவை அல்ல; தற்காலிகமானவைதான். சுமார் 15 ஆண்டுகள் வரை தாங்கக்கூடிய அளவுக்கு வலிமையானவை. இந்த வீட்டில் ஒரு குடும்பம் வசிக்கக்கூடிய அளவுக்குச் சமையலறை மற்றும் வரவேற்பறை ஆகியவை உள்ளே அடங்கி உள்ளன. துருப்பிடிக்காமல் இருப்பதற்காக வேண்டி தரமான ஃபைபர் மூலம் இவை தயாரிக்கப்பட்டுள்ளன.