அமைச்சருக்கு உடல்நலக்குறைவு
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருப்பவர் எஸ் ரகுபதி. இவர் சட்டம், நீதிமன்றம், சிறைத்துறை மற்றும் ஊழல் தடுப்புசட்டம் உள்ளிட்டவற்றை நிர்வகித்து வருகிறார். தற்போது மிகவும் ஆக்டிவ்வாக செயல்பட்டு அடிக்கடி பேட்டி கொடுத்து வருகிறார். இந்நிலையில் தான் இன்று சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்றார். திருச்சியில் அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். ரகுபதிக்கு மருத்துவமனையில் ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ரகுபதி மருத்துவமனையில் நலமாக உள்ளார்.