150 வயதான துறவி
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த 13ஆம் தேதி மகா கும்பமேளா தொடங்கியுள்ளது. இதில் கோடிக்கணக்கான மக்கள் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனர். சுமார் ஒருமாத காலம் நடைபெறும் நிகழ்வில் 45 கோடி பேர் வரை பங்கேற்று புனித நீராடி வழிபடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 150 வயதான துறவி ஒருவர் மகா கும்பமேளாவிற்கு வருகை புரிந்ததாக வீடியோவும், புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. இதுதொடர்பான பதிவு ஒன்றில், “ கும்பமேளா நிகழ்வில் துறவிகள் கூடும் நிகழ்வு மிகவும் அற்புதமானது.