தங்கம் நிலவரம்

ஜனவரி 25-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. நேற்றைய விலையில் தான் விற்பனையாகிறது. கடந்த டிசம்பர் மாதம் ரூ.7,100 ரூபாய்க்கு விற்கப்பட்ட 1 கிராம் தங்கம் படிப்படியாக உயர்ந்து தற்போது 7,555 ரூபாயை எட்டியுள்ளது. ஒரு சில நாட்களாக ஏறிக் கொண்டிருக்கும் தங்கம் விலை சாமானியர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ரூ.60,000-த்தை கடந்து 1 சவரன் தங்கம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று 10 கிராம் தங்கத்தின் விலை 83,000-த்தை எட்டி புதிய சாதனை படைத்தது.சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,555-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 60,440-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.75,550-க்கும் விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published.