பூனையால் பறிபோன வேலை

சோங்கிங் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் ஈடுபாடு கொண்டவர். இதனால் வீட்டில் 9 பூனைகளை வளர்த்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வேலை பளுவால் தான் ஆசையாக வளர்த்து வரும் பூனைகளுக்கு தனியாக நேரம் ஒதுக்க முடியவில்லை என்று நினைத்தார். இதனால் அவர் தனது பணியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார். இதையடுத்து அவர் தனது லேப்டாப்பில் ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை டைப் செய்தார். அதோடு அந்த கடிதத்தை அலுவலக பாஸுக்கு அனுப்ப முடிவு செய்து அவர்களின் இ-மெயில் முகவரியையும் தேர்வு செய்து வைத்திருந்தார். இந்த சமயத்தில் அவரது மனம் திடீரென்று மாறியது. அதாவது பூனைகள் மீது பாசம் காட்ட பணியை ராஜினாமா செய்தால் வாழ்வதற்கான செலவுக்கு என்ன செய்வது? என்று நினைத்தார். இதனால் அவர் அந்த ராஜினாமா கடிதத்ததை அனுப்பாமல் அப்படியே வைத்துவிட்டார். அதேபோல் லேப்டாப்பையும் அவர் ஆஃப் செய்யவில்லை. அப்போது திடீரென்று அவர் வளர்க்கும் பூனை ஒன்று மடிக்கணினி அருகே சென்று ‛என்டர்’ பட்டனை அழுத்தி உள்ளது. இச்சம்பவம் சீனாவில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published.