தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல்
பஞ்சாப் மாநிலத்தில் தேசிய அளவிலான கபடிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். பஞ்சாபில் அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் தர்பாங்கா பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களிடையே போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது திடீரென தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.