புது ஒப்பந்தம் – 3 இலட்சம் கோடி முதலீடு
மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ் டாவோஸ் நகருக்கு சென்றுள்ளார். தன்னுடைய பயணத்தின் மூலம் பல்வேறு நிறுவன தலைவர்களை சந்தித்து முதலீடுகளை ஈர்த்து வருகிறார். இந்த ஒப்பந்தத்தில் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஷ், ஆனந்த் அம்பானி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தின்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் 3.05 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய இருக்கிறது. இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தில் எரிசக்தி, ரீடைல் , ஹாஸ்பிடாலிட்டி , உற்பத்தி ஆகிய துறைகளில் 3 லட்சம் வரையிலான வேலை வாய்ப்புகள் உருவாக இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.