புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மீது புகார்
புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழ்நாட்டில் தெய்வமாக கருதப்படும் பசுவை பற்றி தவறான தகவல்களை பரப்பினர் என்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி விஞ்ஞான ரீதியாக பசுவின் கோமியம் குடிக்கலாம். அது உடலுக்கு நல்லது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது முற்றிலும் தவறான செய்தி என்றும், மேலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செய்தியை் அவர் பரப்புகிறார் என்றும் சென்னையை சேர்ந்த ஒருவர் துச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மீது காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.