டிரம்ப் நடவடிக்கை
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றுவதில் புதிய அதிபராக பதவியேற்ற டிரம்ப் மிகத் தீவிரமாக இருக்கிறார். இதற்காக அவர் பதவியேற்றது முதல் பல்வேறு உத்தரவுகளை அதிரடியாகப் பிறப்பித்து வருகிறார்.
2022ம் ஆண்டு அமெரிக்காவில் சுமார் 1.2 கோடி சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் இருந்ததாகவும், கடந்த 2024ம் ஆண்டில் அந்த எண்ணிக்கை சுமார் 1.4 கோடியாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் குறிப்பிட்ட 6 மாகாணங்களில் தான் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. புளோரிடா , டெக்சாஸ், நியூயார்க், நியூஜெர்சி , மாசசூசெட், மேரிலாந்த் இங்கு தான் அதிகம் புலம்பெயர்ந்துள்ளனர். உரிய விசா பெற்று வந்தவர்களை தவிர சட்ட விரோதமாக வந்தவர்கள் ஏறக்குறைய 1 கோடி பேர் இருப்பார்கள் என்றும், அவர்களால் ஆபத்துக்கள் வரக்கூடும் என்றும், அவர்களைஅமெரிக்காவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார்.