காதலனுக்கு ஜுஸில் விஷம் வைத்து கொன்ற காதலி
கேரள மாநிலம் பாறசாலையைச் சேர்ந்த ஷாரோன் ராஜ் இவர் கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி ரேடியாலஜி படித்து வந்தார். இவருக்கும் களியக்காவிளையை சேர்ந்த கிரீஷ்மா என்ற கல்லூரி மாணவிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்த இளைஞனுக்கு 17.10.2022ஆம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டது, அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி 25.10.22ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.தங்கள் மகனுக்கு அவரது காதலி கிரீஷ்மா தான் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தார் என்று ஷாரோன் ராஜின் பெற்றோர் பாறசாலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு D.S.P. ஜான்சன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியதில் ஷாரோன் ராஜுக்கு அவரது காதலி கிரீஷ்மா கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்தது தெரிய வந்தது. இந்த பெண்ணுக்கு வேறு ஒரு வரன் பார்க்கவே அப்பெண் தனது காதலனை கொலை செய்ய திட்டமிட்டு ஜுஸில் பராகுவாட் என்ற பூச்சி கொல்லி விஷம் கலந்து கொடுத்து ஷரோனை பருக செய்தார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இவருக்கு ஆதரவாக அப்பெண்ணின் தாய்மாமன் நிர்மல்குமார் உடந்தையாக செயல்பாட்ட்டான் என்றும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகாலமாக நடந்து கொண்டிருக்கும் இந்த விசாரணைக்கு முற்றுப்புள்ளியாக சென்ற வாரம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் விஷம் கொடுத்து தன் காதலனை கொலை செய்த கிரீஷ்மாவிற்கு நீதிமன்றம் தூக்குத்தண்டனையும், அவளது தாய்மாமனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்துள்ளது. இந்தியாவில் 2வது தூக்கு தண்டனை கைதி இந்த கரிஷ்மா.