தல அஜித்
தல அஜித் அவர்கள் தற்போது கார் பந்தயத்தில் மிகுந்த கவனம் காட்டி வருகின்றார். துபாயில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் தற்போது கலந்துகொண்டு வருகின்றார் தல அஜித். அடுத்த சில மாதங்களுக்கு அஜித்தின் முழு கவனமும் கார் ரேஸில் தான் இருக்கும் என தெரிகின்றது. எனவே தான் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு பட வேலைகளையும் முழுவதுமாக முடித்து கொடுத்துவிட்டாராம் தல அஜித்.