டொனால்ட் டிரம்ப்
2023, அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் கொஞ்சமும் எதிர்பார்க்காத நேரத்தில் திடிரென்று சுமார் அரை மணி நேரத்தில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான ராக்கெட்டுகளை வீசி அதிரடித் தாக்குதல் நடத்தியது. மேலும் இஸ்ரேலுக்குள்ளும் ஊடுருவிய ஹமாஸ் படையினர் பார்ப்பவரை எல்லாம் சுட்டு வீழ்த்தினர். இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். பலரை பிணை கைதிகளாக பிடித்து சென்றனர். இதனை தொடர்ந்து ஹமாஸ் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இந்த போர் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 70,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகளும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். அமெரிக்கா அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் ஹமாஸ் படையினருக்கு பிணைக் கைதிகளை விடுவிக்க கெடு கொடுத்துள்ளார்.