முருகன் கோவில் உண்டியலில் ஐ.போன்.
திருப்போரூர் முருகன் கோவில் உண்டியலில் ஒரு நபர் தவறுதலாக ஐ போன் போட்டு விட்டார். உண்டியலில் விழுந்த அனைத்தும் முருகனுக்கே சொந்தம் என்று கூறிய கோவில் நிர்வாகம் 2024ல் கோவில் உண்டியலை உடைத்ததில் அதில் 50 லட்சம் பணமும், தங்கம், வெள்ளி பொருட்களும் இருந்தன. அதோடு ஐ போன் ஒன்றும் இருந்தது. உடனே ஐ போன் உரிமையாளரை தொடர்பு கொண்டு கோவிலுக்கு வர சொன்னது கோவில் நிர்வாகம். அவரிடம் உங்கள் போன் உண்டியலில் விழுந்ததால் அது கோவிலுக்கு சொந்தம். நீங்கள் உங்கள் போனில் உள்ள செயலிகளை வேண்டும் என்றால் தரவு செய்து கொள்ளுங்கள் என்று கூறியது. அது குறித்து சர்ச்சை எழுந்த நிலையில் தற்போது அந்த ஐ போன்ஐ உரிய நபரிடம் கொடுக்க கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது