பூனைகளுக்கு கொரோனா வைரஸ்
கடந்த 2019 முதல் 2021 வரை கொடிய கொரோனா தொற்றால் உலகமே பெரும் உயிர் சேதம் அனுபவித்தது. இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு பிறகு தற்போது சீனாவில் மீண்டும் ஒரு வைரஸ் பரவி வருகிறது. ‘ஹியூமன் மெடாநிமோ வைரஸ்’ என்ற, எச்.எம்.பி.வி., தொற்று, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதித்து வருகிறது. இது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சீனாவில் வளர்ப்பு பூனைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது.