பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்
பொங்கல் பண்டிகைக்கு மக்கள் தங்களது சொந்த ஊருக்கு பொங்கல் கொண்டாட பயணம் செய்வது வழக்கம். அந்த தருணத்தில் ரயில்களில் மிகுந்த கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதை நாம் ஏற்கனவே கண்டுள்ளோம். இந்த கூட்ட நெரிசலை தவிர்க்க தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயிலானது விடப்பட்டுள்ளது. இந்த ரயிலானது திருச்சியில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படுகிறது. வண்டி எண் 06190 மற்றும் 06191 திருச்சியில் இருந்து தாம்பரம்-திருச்சி ஜன் சதாப்தி சூப்பர் பாஸ்ட் ரயிலானது இயக்கப்பட இருக்கிறது.